Shankar Completed 30 Years : இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் சினிமா பயணம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு!
1993-ஆம் வருடம் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர்
அதன்பிறகு ஒவ்வொரு படத்திலும் தொழில் நுட்பரீதியாக மற்றும் கதைக்களத்தில் ஏதாவது ஒரு புதுமையை சேர்க்க நினைப்பவர் ஷங்கர்.
ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயங்களை ஒரே பாடலில் காட்சிபடுத்தியது, அதே படத்தின் பாடலில் இரண்டு ஐஷ்வர்யா ராயை ஒரே நேரத்தில் நடனமாட வைத்தது என்று இப்படி அடிக்கிட்டே போகலாம்.
ஹாலிவுட் திரைப்படங்களில் பயண்படுத்தப்படும் தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவிலும் அறிமுகம் செய்து வைத்தார் குறிப்பாக 2.0 படத்தை முழுவதுமாக 3டி-யில் எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் தொழில் நுட்பரீதியாக நவீனப்படுத்தியதற்கும் அதன் வணிகத்தை பெரிதாக்கியதற்கு ஷங்கரின் பங்கு மிகப்பெரிது.
இவரின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் வெற்றி பெற ஏபிபி நாடு சார்பாக வாழ்த்துக்கள்