தேர்தல் முடிவுகள் 2026
(Source: ECI/ABP News)
Thunivu Latest Stills: என்ன ஆரம்பிக்கலாமா.. மிரட்டும் லுக்கில் அஜித்.. வைரலாகும் துணிவு புகைப்படங்கள்!

துணிவு அப்டேட்
துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷ கடலில் மூழ்கடித்துள்ளது
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன
அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, படத்தின் கதாநாயகியும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியர் ஜிப்ரான் இசையமைப்பில் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியானது
இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்
பஞ்சாபில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதால் அதிரடி ஆக்சன் கலந்து கதையாக துணிவு இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறனர்
இந்த நிலையில் படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன