Maniratnam | மகத்தான கலைஞன் மணிரத்தினத்தின் Throwback புகைப்படங்கள்
பிரபல சினிமா பட விநியோகஸ்தர் கோபால ரத்தினம் என்பவரின் மகனாக ஜூன் 2ம் தேதி 1956ம் ஆண்டு பிறந்தவர் மணிரத்னம்
1987ம் ஆண்டு 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் உலகநாயகன் நடிப்பில் வெளியான நாயகன்.
ஹிந்தியின் அம்ரிஷ் பூரி, மலையாளத்தின் மம்மூட்டி மற்றும் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆகியோரை கொண்டு மணிரத்னம் இயக்கிய படம் தளபதி.
1985ம் ஆண்டு மறைந்த பிரபல நடிகர் முரளி, நடிகை ரேவதி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பகல் நிலவு என்ற படம் தான் தமிழில் மணிரத்னம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம்
மணிரத்னம் எழுதி இயக்கி தயாரித்த சில படங்களில் ஓகே கண்மணி திரைப்படமும் ஒன்று. 2015ம் ஆண்டு துல்கர் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியானது.
தமிழில் துல்கர் நடித்த இரண்டாவது திரைப்படம் ஓகே கண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு பல தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் துல்கர்.
பிரபல நடிகர் தளபதி விஜய் இதுவரை இயக்குநர் மணிரத்தினத்துடன் இணைந்து பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் இதுவரை மணிரத்தினதுடன் பணியாற்றவில்லை என்றபோதும். 1995ம் ஆண்டு வெளியான அஜித்தின் ஆசை படத்தை ஸ்ரீராம் என்பவருடன் இணைந்து தயாரித்தார் மணிரத்னம்
2002ம் ஆண்டு வித்யாசமான கதைக்களத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால்.