Adah Sharma : விளம்பர படத்தில் வந்த அந்த பெண்ணா இவர்.. தி கேரளா ஸ்டோரி புகழ் அடா ஷர்மா பற்றிய தகவல்கள்!
1992 ல் மும்பை மாநகரத்தில் பிறந்தவர் அடா ஷர்மா. இந்திய கடற்படையில் கேப்டனாக இருந்த இவரின் தந்தையின் தாய் மொழி தமிழாகும். இவரின் தாய் மலையாள மொழி பேசுபவர்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்ற இவர், தன் படிப்பை அத்துடன் நிறுத்திக்கொண்டார். அதன் பின், கதாக், ஜாஸ், பேலே, பெல்லி ஆகிய நடன கலைகளை கற்றுக்கொண்டார்.
1920 என்ற பேய் படத்தில் அறிமுகமானார் அடா ஷர்மா. இதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்தார். இவர் நடித்த விளம்பர படங்களை பார்த்து, இவரின் ரசிகர் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் பலர்.
பிரபு தேவாவுடன் சார்லி சாப்லின் 2வில் சாராவாக நடித்த இவர், அதில் சூப்பராக நடனமாடி இருப்பார். வெள்ளித்திரையை தாண்டி வெப்சிரீஸ், குறும்படம், மியூசிக் வீடியோ ஆகியவற்றிலும் ரவுண்டு கட்டி அசத்தி வருகிறார். இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருக்கும் அடா, போஸ்ட் பதிவு செய்யாத நாளே இல்லை.
வெளியாவதற்கு முன்பே கடும் சர்ச்சையில் சிக்கிய தி கேரளா ஸ்டோரி படத்தில் ஷாலினி உன்னிக்கிருஷ்ணன்/ ஃபாத்திமா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படம் பேசு பொருளாக மாறியுள்ளதால், அடா ஷர்மா ட்ரெண்டிங்கிள் உள்ளார். இப்படம் மே 5 ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடதக்கது.