Malavika Mohanan Thangalaan: மாளவிகா பிறந்தநாளில் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு!
ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான்( Thangalaan) படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த தமிழர்களின் துயரத்தையும், தங்களுக்கு சொந்தமான பகுதியை அதன் தலைவன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை கூறும் படமாக தங்கலான் இருக்கும் என கூறப்பட்டது.
சுதந்திரத்துக்கு முன்பு இருந்த வரலாற்றை கூறும் படமாக தங்கலான் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மூன்று தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாளவிகா மோகனின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்திருக்கும் கேரக்டரின் போஸ்டரை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது.
காட்டுவாசி பெண்ணை போல் உடை மற்றும் ஆபரணங்களை அணிந்திருக்கும் மாளவிகா மோகனன் கையில் ஆயுதத்தை கையில் ஏந்தி இருக்கும் போஸ்டரை பகிர்ந்த ரசிகர்கள், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.