Teachers of Tamil Cinema : கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தமிழ் சினிமாவின் நல்லாசிரியர்கள்..பட்டியல் இதோ!
'பரியேறும் பெருமாள்' படத்தில் பூ ராமு கேரக்டர். சாதிய அடக்குமுறையிலிருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ள கல்விதான் சிறந்த ஆயுதம் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கும் கேரக்டர். 'அன்னைக்கு என்னைய அடக்கணும்னு நெனைச்சவன்லாம் இன்னைக்கு ஐயா சாமின்னு கும்பிடுறான்' என படிப்பு ஒருவரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேராண்மை - ஜெயம் ரவி பழங்குடியினத்தைச் சேர்ந்த படித்த ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியான ஜெயம் ரவி, அங்கு என்சிசி பயிற்சிக்காக வரும் மாணவிகள் படைக்கு அதிகாரியாக வருகிறார். அதில் காட்டுக்குள் 5 மாணவிகளை தேர்வு செய்து நாட்டுக்கு எதிராக நிகழப்போகும் ஆபத்தை தடுப்பதே இப்படத்தின் கதை. ஆனால் சாதிய அடக்குமுறையாலும், முதலாளித்துவத்தாலும் புறக்கணிக்கப்பட்டாலும், கல்வியும், திறமையும் தான் நம்மை மேலும் பலப்படுத்தும் என்பதை பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தியது இப்படம்.
பட்டாளம் - நதியா பதின்பருவ மாணவ, மாணவியர்களின் குறும்புகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்திய இப்படத்தில் ஆசிரியையாக நடித்து பாராட்டைப் பெற்றிருந்தார் நதியா.
ராட்சசி - ஜோதிகா 2019 ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படத்தில் கீதா ராணி என்னும் கேரக்டரில் ஜோதிகா பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருந்தார். மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் அரசு பள்ளியை பிரச்சினை கொடுக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்படி முன்னேற்றி கொண்டு வருகிறார் என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
சாட்டை - சமுத்திரகனி ரேங்க் மற்றும் மதிப்பெண் ஒரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்காது. அவர்களுக்கு என்ன வரும் என்பதை அறிந்து சொல்லி கொடுத்தால் எளிதாக ஆசிரியருக்கும், மாணவருக்கும் வெற்றி கிடைக்கும் என்பதை ‘சாட்டை’ படம் விளக்கியிருந்தது. இந்த படத்தில் தயாளன் என்னும் கேரக்டரில் சமுத்திரகனி ஆசிரியராக நடித்திருப்பார். நல்ல ஆசிரியர் vs மோசமான ஆசிரியர் என்ற பாணியிலான கதையில் மாணவர்களிடையேயான தயக்கம், பாலின பிரச்சினைகள் என அனைத்தையும் பேசிய விதத்தில் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது.
வாகை சூடவா - விமல் 2011 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூடவா படத்தில் விமல், ‘வேலுதம்பி’ என்னும் ஆசிரியர் கேரக்டரில் நடித்திருந்தார். தமிழில் கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாக சொல்லியிருக்கும் படங்களில் ஒன்று இப்படமாகும். தான் செங்கல் சூளையில் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படுவதை உணர்ந்த பெண் தன் மகனை ஆசிரியரான விமலிடம் அழைத்து வந்து, “என் பிள்ளைக்கு எதையாச்சும் சொல்லிக்கொடுயா” என சொல்லும் அந்த ஒரு காட்சி கல்வி எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொண்டது என்பதற்கு சான்று.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -