Tamil Movies : மலபார் போலீஸ் முதல் பாணா காத்தாடி வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
வசந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இப்படத்தில் ஓ சென்யோரீட்டா, சுடிதார் அணிந்த, இரவா பகலா என்ற பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிறப்பாக அமைந்தது.
பி வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளிவந்த படம் மலபார் போலீஸ். இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படத்தில் சத்யராஜ் மலையாள மொழி பேசும் போலீஸாக நடித்து இருந்தார். இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
கெளதம் இயக்கத்தில் முரளி நடித்து வெளிவந்த படம் கனவே கலையாதே. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இப்படத்தில் சிம்ரன் முதல் முறையாக இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்து வெளிவந்த படம் பாணா காத்தாடி. இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.