HBD Sundar Pichai : தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை.. சுந்தர் பிச்சை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
பிச்சை கூகுளில் சேர்வதற்கு முன்பு மெக்கின்சி & கம்பெனியில் சிறிது காலம் வேலை செய்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏப்ரல் 1 2004ல் கூகுள் நிறுவனத்தில் ஜிமெயில் லாஞ்ச் செய்யப்பட்டது. சுந்தரிடம் ஜிமெயில் பற்றி கேள்வி கேட்டக்கப்பட்ட போது, ஜிமெயிலை விரிவாக்க அவரது ஐடியாவை கொடுத்தாராம்.
கூகுளின், குரோம் மற்றும் குரோம் ஓஎஸ் போன்ற பல தயாரிப்புகளுக்கான தயாரிப்பு மேலாண்மையை பிச்சை வழிநடத்தினார். கூகுள் டிரைவின் வளர்ச்சியிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆகஸ்ட் 10,2015 அன்று சுந்தர் பிச்சை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியானார்
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ஆன நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பிச்சை ஆல்பபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2022 இல், அவருக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
சுந்தருக்கு கிரிக்கெட் மீதும் கால்பந்து மீதும் ஆர்வம் கொண்ட இவர் எஃப்சி பார்சிலோனாவின் தீவர ரசிகர் ஆவார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -