காஞ்சனா 4 படத்தில் கவர்ச்சியில் கலக்க வரும் சன் டிவி சீரியல் நடிகை! அட இவங்களா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, நோரா பதேகி, கோவை சரளா, ஸ்ரீமன், திவ்யதர்ஷினி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்தை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக படத்தை தயாரிக்கும் பணியிலிருந்து பின் வாங்கியது.
இதன் காரணமாக கோல்டு மைன்ஸ் நிறுவனம் தயாரிக்க சம்மதம் தெரிவித்தது. அதோடு ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை பட்ஜெட்டில் தயாரிக்க சம்மதம் தெரிவித்தது.
இந்த நிலையில் தான் காஞ்சனா 4 படத்தில் சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.
அவர் வேறு யாரும் அல்ல சன் டிவியில் ஒளிபரப்பான இலக்கியா தொடர் மூலம் பிரபலமான நடிகை ஹீமா பிந்து தான்.
இவர் இதயத்தை திருடாதே, இலக்கியா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் வைத்து பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சனா படத்தில் ஹீரோயின் கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த முறை இந்த கவர்ச்சி கோதாவில் சீரியல் நடிகையும் ஐக்கியமாகி உள்ளார் என கூறப்படுகிறது.