Sujatha Mohan : ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..’ஹஸ்கி குரல் நாயகிக்கு இன்று பிறந்தநாள்!
சுஜாதா மோகன் 1963ல் கொச்சியில் பிறந்தவர். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆறாம் வகுப்பு படிக்கும் போதே இசை பயணத்தை தொடங்கிய சுஜாதா தனது வாழ்க்கையில் அவர் இதுவரை 20,000திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
இவரின் முதல் தமிழ் பாடலாக அமைந்த ‘காதல் ஓவியம் கண்டேன்’படத்தில் சேர்க்கப்படவில்லை. பின், காயத்ரி படத்தில் இடம்பெற்ற காலை பனியில் பாடல் இவரது முதல் பாடலாக அமைந்தது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜாவின் புது வெள்ளை மழை என்ற பாடல் செம ஹிட்டாகியது. சுஜாதா - ஏ.ஆர்.ஆர் காம்போவில் பல ஹிட் பாடல்கள் வந்துள்ளது. இவரது ஹஸ்கி குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவரது 60வது பிறந்தநாளை கொண்டாடும் சுஜாதாவிற்கு வெள்ளை மழை பொழிகிறது போல், வாழ்த்து மழை பொழிகிறது. பிறந்தநாளான இன்று ரசிகர்களும் திறைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -