Actor Soori : அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக கமிட் ஆகும் சூரி..தொடங்கியது புது படத்தின் ஷூட்!
'விடுதலை - பாகம் 2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள்.
இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சூரி, கதாநாயகனாக அறிமுகமான விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது, படக்குழுவினர் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வெற்றிமாறன் - இளையராஜா - சூரி - விஜய் சேதுபதி காம்போ பிரமாதமாக அமைந்தது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘கொட்டுக்காளி’ எனும் படத்திலும் சூரி நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சூரியின் மீதான எதிர்ப்பார்பை எகிற வைத்தது.