Soori Birthday : காமெடியன் டூ கதாநாயகன்.. சூரியின் பிறந்தநாள் இன்று!
மதுரையில் ராமலக்ஷ்மண் முத்துச்சாமியாக இருந்த இவருக்கு சினிமா, சூரி என்ற அடையாளத்தை கொடுத்தது. ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தார்.
பின்னர், போராட்டா என்று சொன்னாலே சூரி ஞாபகம் வரும் அளவிற்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது வெண்ணிலா கபடி குழு.
அதன் பின் சூரியின் காட்டில் மழைதான். களவாணியில் தொடங்கி , பிரின்ஸ் வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தார்.
ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்தாலும், சூரி - சிவகார்த்திகேயன் காம்போவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
காமெடி நடிகர்கள் பலர் ஹீரோவாக நடிக்கும் ட்ரெண்ட் தொடங்கிய போது, கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே தனது மாறுப்பட்ட சீரியஸான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
விடுதலை படத்திற்காக தன் உடல் வாகுவை மாற்றினார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கொட்டுக்காளி படத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சூரிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.