Shiva Rajkumar : சான்டல்வுட்டை டார்கெட் செய்யும் தமிழ் சினிமா இயக்குநர்கள்..எகிறும் சிவராஜ் குமாரின் டிமாண்ட்!
சான்டல்வுட்டில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ் குமார்.
இவர் தற்போது ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
அதேபோல், ஈட்டி, ஐங்கரன், ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு தனது அடுத்த படத்தை கன்னடத்தில் சிவராஜ் குமாரை வைத்து இயக்க உள்ளார்.
இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
இப்படம் ஆக்ஷன் திரில்லராக உருவாக உள்ளது. அதைதொடர்ந்து படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
இப்படம் கன்னடத்தில் உருவாகி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் டப்பிங் செய்ய பட உள்ளது என கூறப்படுகிறது.
அதேபோல், இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், வெங்கட் பிரபு ஆகியோர் கன்னடத்தில் படங்களை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு பின், சிவராஜ் குமாரின் டிமாண்ட் எகிறியுள்ளது.