Shivanna about Ajithkumar : ‘அஜித்குமாருடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம்..’ வைரலாகும் சிவராஜ் குமாரின் பேட்டி!
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார்.
சமீபத்தில் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் இவர் நடித்த காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவர் தனுஷின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இவர் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் பேசும்போது, “நடிகர் அஜித்துடன் இணைந்து நடிப்பது எனக்கு விருப்பமாக உள்ளது. அதேபோல் நடிகர் அஜித் மிகவும் தன்மையானவர் அவரின் வாழ்க்கை மற்றும் பைக் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து நடிகர் அஜித்குமாரும் சிவராஜ்குமாரும் இணைந்து விரைவில் நடிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.