Swathi Sharma : அம்மா முன்பே சீரியல் நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசிய நபர்.. நடிகை சுவாதி ஓபன் டாக்!
வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' சீரியலின் கதாநாயகி சுவாதி சர்மா.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சுவாதி சர்மா கலந்து கொண்டுள்ளார். அதில் சுவாதி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த சமயத்தில் வாய்ப்புக்காக ஒருவரை சந்திக்க அம்மாவுடன் சென்றுள்ளார் சுவாதி. அவரை சந்திக்க வந்த நபர் சுவாதியின் அம்மா முன்னரே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதைதொடர்ந்து அந்த நபரை கோபமான சுவாதியின் அம்மா கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் வெளியில் வந்த பிறகு சுவாதியிடம் நான் இருக்கும் போதே இப்படி கேட்டவர்கள் நாளை நீ தனியாக நடிக்க செல்லும் போது என்னென்ன கேட்பார்கள் அதனால் இனிமேல் நடிக்க வேண்டாம் என்றுள்ளார்”.
பின்னர் நடிகை சுவாதி சர்மா தனது அம்மாவை சமாதானப்படுத்தி நடிக்க ஓப்புதல் வாங்கியுள்ளார்.
இச்சம்பவம் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.