சத்யராஜ் கூட இருக்கும் இந்த பொடியன் யாரு தெரியுதா? வைரலாகும் பிளாஷ்பேக் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசட்டம் என் கையில் திரைப்படம் மூலம் அறிமுகமான சத்யராஜ் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சத்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்த 'பூவிழி வாசலிலே' மற்றும் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஃபாசில்.
அந்த படங்களின் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட பிளாஷ்பேக் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சத்யராஜ் உடன் இருப்பது இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவராக இருக்கும் நடிகர் ஃபகத் பாசில்.
இயக்குநர் பாசில் மகன் தான் நடிகர் ஃபகத் பாசில்.
சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான பகத் பாசில் தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தமிழ் படத்தில் நடித்தால் கலக்கலாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -