Samantha: ‘வாழ்க்கையை புரிந்து கொண்டேன்..’ தனது கரடுமுரடான வாழ்க்கைப் பயணம் குறித்து சமந்தா வெளியிட்ட பதிவு!
கடந்த சில நாட்களாக, தனது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிவாகரத்திற்கு பிறகு, மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த நோயின் பாதிப்புகள் குறித்தும், அவ்வப்போது சில நேர்காணல்களில் சமந்தா பேசி வந்தார்.
இதையடுத்து, மீண்டும் உடற்பயிற்சி செய்து கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய நிலைக்கு திரும்பினார் சமந்தா.
சில நாட்களுக்கு முன்னர், சிட்டி பாபு சமந்தாவின் திரைவாழ்க்கை முடிந்து விட்டதாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
குதிரை மீது சவாரி செய்யும் சமந்தா.
சமந்தாவிற்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதையடுத்து, வாழ்க்கை குறித்த தனது கருத்தினை சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
”மரத்தை நடுபவர்கள் அதன் நிழலை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் கடைசியில் அவர்கள்தான் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவர்கள் ஆகின்றனர்” என்ற ரவீந்திரநாத் தாகூரின் கருத்தினை தனது பதிவோடு இணைத்துள்ளார் சமந்தா. “இப்படித்தான் எனது வாழ்க்கையை பார்க்கிறேன்” எனவும் தனது பதிவில் கூறியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -