Kantara 2 First Look : ‘வராஹ ரூபம்..’ வருகிறது காந்தாரா எ லெஜண்ட் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!
சுபா துரை | 25 Nov 2023 02:18 PM (IST)
1
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் காந்தரா.
2
இப்படம் கன்னட மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
3
20 கோடி முதலீட்டில் உருவான காந்தாரா 450 கோடி வசூலை ஈட்டி திரையுலகினரை ஆச்சரியத்தில் முழ்கடித்தது.
4
இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளி்யாகும் என்று படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது காந்தாரா 2 குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
5
காந்தாரா ப்ரீக்குவல் படமான காந்தாரா எ லெஜெண்ட் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 27 ஆம் தேதி மதியம் 12:25 மணிக்கு வெளியாகும் என்ற அப்டேட்ட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
6
படக்குழுவினரின் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.