SPB Birthday : 'பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா'...பாடகர் எஸ்.பி.பியின் பிறந்தநாள் இன்று...!
எஸ்.பி. பாலசுப்ரமணியம்(SP Balasubrahmanyam) முதன் முதலில் 1966-ஆம் ஆண்டு சிறீ சிறீ சிறீ ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்
தமிழில் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் தான் முதலாவதாக வெளியானது.
இவர் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
6 முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி.
மேலும் இவர் ஏராளமான மாநில அளவிலான விருதுகள் உள்ளிட்டவற்றை வென்று குவித்துள்ளார். மேலும் 16 இந்திய மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி
உற்சாகம், சோகம், காதல் என அனைத்தையும் தன் குரலிலேயே வெளிப்படுத்தும் வித்தகர். அதனால் தான் இவர் ஏராளமான இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் விருப்பமான பாடகராக இருந்தார்.
தன் குரலிலே மாயாஜாலம் செய்து பாடலை கேட்பவர்களை தன் வசப்படுத்தும் வித்தகர் பாடுநிலா எஸ்.பி.பியின் பிறந்த நாள் இன்று.