Rathna Kumar : அடுத்த படத்திற்கு அப்டேட் கொடுத்த லோக்கியின் நண்பர் ரத்ன குமார்!
மேயாத மான், ஆடை, குலுகுலு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்ன குமார். விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.
இவர் எழுதி இயக்கிய மேயாத மான் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
மேயாத மான் திரைப்படத்திற்கு பிறகு இவர் எழுதி இயக்கிய ஆடை திரைப்படத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
அதன் பின் வந்த குலுகுலு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. குளுகுளு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
சில நாட்களுக்கு முன்னர் தன் படத்திற்கு கதை எழுத போவதாகவும் அதற்காக சோஷியல் மீடியாவில் இருந்து சின்ன ப்ரேக் எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரத்ன குமார்.
கடைசியாக லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் இவரின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.