Watch Annaatthe Trailer: வந்தாரு காளையன்.. மரண மாஸ்.. வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்.. புகைப்படங்கள்
இந்திய திரையுலகினரால் தலைவா என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் , தீபாவளி சரவெடியாக களமிறங்கவுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’
இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நாயகிகள் மட்டுமல்லாது 90 களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த குஷ்பு , மீனா உள்ளிட்ட நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதும் , இமான் இசையமைத்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே.
வழக்கமாக எதாவது ஒரு செண்டிமெண்ட்டை கையில் எடுக்கும் சிவா, இப்படத்தில் அண்ணன் - தங்கை செண்டிமெண்டை கையிலெடுத்துள்ளார்.
ரஜினியை மாமா, அத்தான் என உரிமையோடு அழைக்கும் குஷ்பு, மீனா இருவருமே ரஜினியின் முறைப்பெண்ணாக நடிப்பதாக தெரிகிறது
பக்கா கிராமத்து கதையாக உருவாகியுள்ள அண்ணாத்த பக்கா மசாலா திரைப்படம் என்பதை ட்ரைலர் பக்காவாக உணர்த்துகிறது
குடும்ப செண்டிமெண்ட், வில்லன், மாஸ் காட்சிகள், காதல் என அனைத்துமே இப்படத்தில் இடம்பெறும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்கிறது அண்ணாத்த ட்ரைலர்
படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை அதகளப்படுத்தியது
பேரு காளையன், ஊரு சூரைக்கோட்டை, சுத்தி இருக்கிற எல்லா கிராமத்துக்கும் பிரசிடென்டு என்று ரஜினிக்கு அம்சமான அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள்.