Viduthalai : 'தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்...' வெற்றிமாறனை சந்தித்த ரஜினி!
அறிமுகமான நாள் முதல் வெற்றிமாறன் எழுதி இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் ஆனது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் என்று அழைக்கப்படும் இவர், சமீபத்தில் சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கினார்.
பலமாத காலமாக படம்பிடிக்கப்பட்ட இது, விடுதலை பாகம் 1, விடுதலை பாகம் 2 என இரு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் மீது ஏகோபித்த எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில், சூரியின் மாறுபட்ட நடிப்பு நின்று பேசியது.
மக்களின் பேராதரவை பெற்ற விடுதலையின் முதல் பாகத்தை, நடிகர் ரஜினிகாந்தும் பார்த்துள்ளார். இதனை பார்த்த இவர் படக்குழுவினரை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் விடுதலை படத்தை பாராட்டி ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -