Raghava Lawrence : ‘அந்த மனசுதான் சார் கடவுள்..’ 150 குழந்தைகளை தத்தெடுத்து பாராட்டுக்களை குவித்து வரும் லாரன்ஸ்!
சிறுவயதிலிருந்து ரஜினிகாந்தை திரையில் பார்த்து வளர்ந்த ராகவா லாரன்ஸ், அவரின் தீவர ரசிகராக மாறினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதனக்கென தனி ஸ்டைலை கொண்ட இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநராக தன்னை வளர்த்துக்கொண்டார். லாரன்ஸ் மாஸ்டர், அவரது அம்மாவின் மீதும் தம்பியின் மீதும் கொள்ளை பிரியம் வைத்துள்ளார்.
தனது அம்மாவிற்கு கோயில் கட்டி கொண்டாடும் இவர், ராகவேந்திரரின் தீவர பக்தர் ஆவார்
நடனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். முனி, காஞ்சனாவில் வொர்க்-கவுட் ஆகிய ஃபார்முலா, மீத படங்களுக்கு செட் ஆகாமல் ப்ளாப் ஆகியது. தற்போது, ருத்ரன் படத்தில் நடித்துள்ளார்.
ப்ரியா பவானி ஷங்கர் - லாரன்ஸ் காம்போவில் உருவாகிய இப்படத்தை வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ருத்ரன் பட பிரச்சினை ஒரு புறம் இருக்க, அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “150 குழந்தைகள் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியை வழங்க உள்ளேன். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அனைவரது ஆசியும் எனக்கு வேண்டும்.” என நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -