Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
சிறுவயதில் தனது ஊரில் இருந்த சலூன் கடைக்காரரைப் பார்த்து பெரிய ஹேர்ஸ்டைலிஷ்ட் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
அவரது கனவை தகர்க்க பல தடைகள் தோன்றவே அதனை ஆர்.ஜே.பாலாஜி எவ்வாறு வெல்கிறார் என்பதே கதை அமைப்பு என்பது போல் தெரிகிறது.
இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா உள்ளிட்டோர் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.
மொத்தமாக சிங்கப்பூர் சலூன் ட்ரெய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.