RS Shivaji : ‘சார் நீங்க எங்கேயோ போய்டீங்க சார்..’ சந்தான பாரதியின் சகோதரர் காலமானார்!
தனுஷ்யா | 02 Sep 2023 12:08 PM (IST)
1
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார்.
2
‘சார் நீங்க எங்கேயோ போய்டீங்கா சார்’என்ற வசனம் பேசி பிரபலமான இவர், 1981-ல் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் தனது திரை வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
3
விக்ரம், அபூர்வ் சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, அன்பே சிவம் போன்ற பல படங்களில் கமல் உடன் நடித்துள்ளார்.
4
சமீப காலங்களில் வெளியான கார்கி, பாரீஸ் ஜெயராஜ், சூரரைப் போற்று, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பதை பார்த்திருப்போம். சினிமா மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் ஃபேமஸ்.
5
image 5 ஆர்.எஸ்.சிவாஜி நடிகர் சந்தான பாரதியின் மூத்த அண்ணன் என்பது குறிப்பிடதக்கது.
6
இவர் காலமான செய்தி, சினிமா வட்டாரத்தை துயரம் அடைய செய்துள்ளது.