Ponniyin Selvan 2 : மீண்டும் ஒரு சோழர் கதை.. பறக்கப்போவது புலி கொடியா? மீன் கொடியா?
தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவை மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் நினைவாக்கியது. முதல் பாகத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், மக்களின் மனதில் உண்டான குழப்பங்களுக்கும் இரண்டாம் பாகம் பதிலளிக்கவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியானது.
முதல் பாகத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
கடந்த முறை நடந்தது போல, இம்முறையும் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர், கொச்சின், ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் கோலகலமாக ப்ரோமோஷன் நடைப்பெற்றது.
விமானத்தில் எடுக்கப்படும் செல்ஃபி முதல் டெல்லியில் சாப்பிட்ட குல்ஃபி வரை பொன்னியின் செல்வன் பட குழுவினர்களின் பல க்யூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
28ஆம் தேதியான நாளை பொன்னியின் செல்வன் 2 வெளியாகவுள்ளது.
முதல் பாகத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கு பெரிதாக இல்லையென்றாலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் முதல் நாளின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லானாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -