Politicians Condolence to Marimuthu : சீமான் முதல் உதயநிதி வரை.. மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்த அரசியல்வாதிகள்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “அப்பா மணிவண்ணன் போல பன்முக திறன் கொண்ட கலைஞராக மென்மேலும் மிளிர்வார் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது. நான் அரசியல்துறைக்கு வந்துவிட்ட பிறகும், பல நேர்காணல்களில் என்மீதான பேரன்பினை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்திய அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகரும், வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவரும், எதிர்நீச்சல் தொடர்மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து அவர்கள் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். திரு. மாரிமுத்து அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “நாங்கள் பெரியார் திடலுக்கு அழைத்து இந்த ஆண்டு அவருக்கு பெரியார் விருது அளிக்க இருந்தும்.. இயற்கை இப்படி செய்து விட்டது... பகுத்தறிவாளர் மற்றும் திரை துறையினருக்கு மிக பெரிய இழப்பு... அவர் குடும்பத்திற்கு மட்டும் இல்லை அவரை இழந்து தவிக்கும் திரை துறை சார்ந்த அனைவரிடமும் நான் இரங்கலை தெரிவி்த்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், “இயக்குநர், நடிகர் திரு.மாரிமுத்துவின் மரணச்செய்தி இதயத்தில் இடி என விழுந்தது..! துயரம் கவ்வியது.. கண்ணீர் கலங்கியது.. வேதனை உள்ளத்தில் பரவியது.. அதிர்ச்சியில் உறைகிறேன்.. ஆற்றொண்ணா துயரத்தில் கரைகிறேன்...!” என கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -