Fahadh Faasil - Nazriya: 9ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி க்யூட் போட்டோ பதிவிட்ட ஃபகத் - நஸ்ரியா!
மலையாள சினிமா தாண்டியும் தன் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இருப்பவர் நடிகர் ஃபஹத் ஃபாசில். ஃபஹத் மலையாளம் கடந்து ரசிகர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே தனது க்யூட் நடிப்பால் பிற மொழி ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை நஸ்ரியா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிரையுலகில் தன் கரியரின் உச்சத்தில் இருந்தபோது நஸ்ரியா மலையாள சினிமாவின் கவனத்தை மெல்ல தன் பக்கம் திருப்பி லைக்ஸ் அள்ளி வந்த நடிகர் ஃபஹத் ஃபாசிலை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நஸ்ரியாவும் ஃபஹத்தும் பெங்களூர் டேஸ் படத்தில் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2014ஆம் ஆண்டு விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு கூடே படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும், அண்டே சுந்தரானிக்கி படம் மூலம் தெலுங்கில் சென்ற ஆண்டும் கம்பேக் கொடுத்த நஸ்ரியா, தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
மறுபுறம், இந்திய சினிமா வியந்து பார்க்கும் சமகால நடிகர்களில் ஒருவராக விருட்சமென உயர்ந்துள்ள ஃபஹத் ஃபாசில், தற்போது நேரடி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பான் இந்தியா ரசிகர்களையும் தன்னை கொண்டாட வைத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று ஃபஹத் ஃபாசில் - நஸ்ரியா தம்பதியினர் தங்களது 9ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -