Nayanthara Onam Celebration : அட நம்ம நயன் பசங்களா இவங்க? உடனே வளர்ந்துட்டாங்களே!
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில், நயனிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த உறவு காதலுடன் முடியாமல் கல்யாணம் வரை சென்றது. இவர்களின் திருமணம் திரை நட்சத்திரங்கள் சூழ கோலகலமாக நடந்தது.
இந்த இரு ஜோடிகளும் வாடைக்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிய அறிவிப்பை விக்கி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனால் இவர்கள் சர்ச்சையில் சிக்கினாலும், சட்ட ரீதியாக பிரச்சினையை தீர்த்தனர்.
இரு குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில், உலக் தெய்வேக் என வித்தியாசமான பெயரை சூட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.
தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி போட்டோ எடுத்து பகிரும் விக்கி, ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
இரு பிள்ளை நிலாக்களும், ஓணம் சதயா உணவை சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. தங்களின் முதல் ஓணத்தை பெற்றோருடன் கொண்டாடியுள்ளனர்.
ஓணம் சதயா சாப்பிடும் அளவிற்கு இவர்கள் வளர்ந்து விட்டார்கள் போன்ற கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த 3 புகைப்படங்கள் இணையவாசிகள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொச்சியில் இருக்கும் நயனும் விக்கியும்...
“எங்கள் எளிய, அழகான வாழ்க்கையில், சிறப்பாக உணரும் ஒரு அழகான, எளிமையான தருணம் இது. எனது உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் விழா இங்கு தொடங்குகிறது. அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார் விக்கி.