ஹோம்லி லுக்கில் அன்னபூரணியாக களமிறங்கும் நயன்தாரா!
நயன்தாரா, நடிகர் ஜெய், சத்தியராஜ், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 1 தேதி வெளியாகிறது.
அன்னபூரணி திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோ, ட்ரேடின்ட் ஆர்ட், நாடு ஸ்டூடியோ இணைந்து தயாரித்து வெளியிடுகிறது.
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கும் இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
இது நயன்தாராவின் 75 வது திரைப்படமாகும். ஏற்கனவே அன்னபூரணி திரைப்படத்தின் டீசர் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னை மற்றும் திருச்சியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிக் பாஸ் சுரேஷ் சக்கரவத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் 1 தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.