HBD Harris Jayaraj : மியூசிக்கல் மாம்ஸ் ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் இன்று!
2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் மியூசிக் கம்போசர்.
முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். மின்னலே படத்தின் தீம் மியூசிக் இன்றும் பலரின் ரிங் டோனாக இருக்கிறது.
ஆரம்ப காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, சிற்பி, ஆதித்யன், வித்யாசாகர் உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்தவர்.
600க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசைமைத்துள்ளார். அதிலும் குறிப்பாக கோகோ கோலா விளம்பரம் ஒன்றில் விஜய் நடித்திருப்பார். அது மிகவும் பிரபலமானது.
மஜ்னு, 12 பி, சாமி, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், காக்க காக்க, ஒரு கல் ஒரு கண்ணாடி, கோ, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இசை புதல்வன் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.