Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
The Nun Movie Review : தி நன் திரைப்படத்தின் குட்டி விமர்சனம் இதோ..!
மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் டைசா ஃபார்மிகா, ஜோனாஸ் ப்ளோகெட், போனி ஆரோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் நன் 2. 2018 ஆம் ஆண்டு வெளியான நன் 1 திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநன் படத்தின் முதல் பாகத்தில் ரோமானியாவில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் இம்முறை பிரான்ஸில் நடக்கிறது.
இவற்றை தடுத்து நிறுத்த பிஷப் மீண்டும் சிஸ்டர் ஐரினை பிரான்ஸிற்கு அனுப்புகிறார். அவருடன் சிஸ்டர் டெப்ராவும் செல்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பேயை அழித்தார்களா..? இடையில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன..? என்பதே நன் 2.
நடிகர்களின் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தாலும் நன் 2 எதோ சிறு வெறுமை உடனே நிற்கிறது. பேய் படமாக இருந்தாலும் புதிதாக திகிலுட்டும் விதத்தில் எந்த ஒரு முயற்சியும் இயக்குநர் எடுக்கவில்லை. நன் உருவம் அவ்வப்போது வந்து செல்கிறது அவ்வளவே. மேலும் நன் 1 வெளியான போது சிஸ்டர் ஐரினிற்கும் காஞ்சுரிங்கில் வரும் லோரெய்ன் வாரனிற்கும் தொடர்பு இருக்கிறதா என பல்வேறு கேள்விகள் எழுந்தன. நன் 2’ல் அந்த இருவருக்கும் தொடர்பு உள்ளதென சிறு ஹிண்டை கொடுத்துள்ளார் இயக்குநர்.
நன் 1, காஞ்சுரிங் திரைப்படங்களை ஆங்காங்கே தொட்டுவிட்டு போகும் நன் 2, எதையும் முழுதாக விவரிக்கவில்லை. அனைத்தும் அரைகுறையாக சொல்வது போன்ற உணர்ச்சி எழுந்தது. அரைகுறை கதை..அரைகுறை த்ரில்..என அனைத்தும் அரை குறையாகவே இருக்கிறது.
நன் 2 தனிப்படமாக பார்க்க சிறந்த படமாக இல்லையென்றாலும் அடுத்தடுத்து வரவிருக்கும் நன் படங்களுக்கு நல்ல ஒரு பக்கபலமாக இருக்கும் என்றே கூறலாம். மொத்தத்தில் நன், காஞ்சுரிங் திரைப்பட பிரியர்கள் அந்த கதையின் தொடர்ச்சியை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நன் 2 திரைப்படத்தை சென்று பார்த்து வரலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -