Pathu Thala : ஏ.ஜி.ஆராக மாறிய எஸ்.டி.ஆர்.. பத்து தல படத்தின் குட்டி விமர்சனம் இதோ!
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியுள்ள பத்து தல படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிம்புவிற்கு கொடுக்கப்படும் ஹைப்பை, எஸ்.டி.ஆரின் ரசிகர்கள், விசில் அடித்து கொண்டாடியுள்ளனர். இப்படத்தில், ப்ரியா பவானி - கெளதம் கார்த்திக்குமான காதல் கதை திருப்தி செய்யவில்லை.
சிம்பு, “கெட்டவனுக்கு கெட்டவன் நல்லவனுக்கு நல்லவன்” என்ற அவரின் டயலாகிற்கு ஏற்ப நடித்துள்ளார். நடிப்பில் ரவுண்டு கட்டி வரும் கெளதம் வாசுதேவ் மேனன், வில்லனாக நடித்து அசத்துயுள்ளார்.
ராவடி என்ற பாடலுக்கு ஆடியிருக்கும் சாயிஷாவின் நடனம் சற்று செயற்கையாக உள்ளது. ஓ சொல்றியா மாமாவுக்கு டஃப் கொடுக்க நினைத்து டம்மி ஆகியுள்ளார் சாயிஷா. மனுஷ்யபுத்திரன், அவரின் முதல் படத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தில் வரும் ஒசரட்டும் பத்து தல பாடலிற்கு பின், நம்ம சத்தம் பாடல் நன்றாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் ஆங்கில பிஜிஎம் படத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. மீதம் உள்ள பாடல்கள் , பிஜிஎம் ஓகே ரகம்தான்.
கன்னியாகுமரியின் அழகையும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் ஆங்கங்கே கண்முன் காட்டும் இப்படம், கருத்துக்களை சொல்லி கழுத்தறுக்கவில்லை. கொடுக்கும் பணத்துக்கு என்ஜாய் செய்யலாம் என்ற வகையில் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -