Vadakkupatti Ramasamy Review: சிரிப்பலைகளை அதிரவிட்ட வடக்குப்பட்டி ராமசாமி..குட்டி விமர்சனம் இங்கே!
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஊரில் ஒரு சிறுவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. தற்செயலாக நடந்த சம்பவத்தால் அவன் செய்த பானையை அந்த ஊரில் உள்ளவர்கள் கடவுளாக வழிபட ஆரம்பித்துவிட்டனர். இதனை தனக்கு வருமானம் பார்க்கும் ஒரு வியாபாரமாக மாற்றி வாழ்ந்து வருபவர் சந்தானம்.
இவருடன் இணைந்து ஊரை ஏமாற்றிவருபவர்களாக மாறனும், லொல்லு சபா சேஷூவும் நடித்துள்ளனர். இவர்களின் இந்த வாழ்க்கை முறைக்கு முட்டுக்கட்டையாக வட்டாட்சியர் இருக்க, பிரச்சினைகள் ஏற்பட்டு கோவில் மூடப்படுகிறது.
அடுத்தடுத்து என்ன நடக்கிறது..? கோவில் திறக்கப்பட்டதா என்பதே திரைப்படம்.
சந்தானம், மாறன், லொல்லு சபா சேஷூ வரும் காட்சிகளில் சிரிப்பலைகளால் நிறைந்துவிடுகிறது திரையரங்கம்.நிழல்கள் ரவி தனது நகைச்சுவையின் மூலம் தனி கவனத்தை பெறுகிறார்.
மொத்தமாக பார்க்கையில் வடக்குப்பட்டி ராமசாமி உங்கள் வீக் எண்டிற்கு சிறந்த விருந்தாக இருக்கும் என்றே சொல்லலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -