Indian 2 Release Date : இறுதிகட்ட படப்பிடிப்பில் இந்தியன் 2...விரைவில் ரீலிஸ் தேதியை அறிவிக்க உள்ள படக்குழு ! எப்போது ?
நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் சங்கர் கூட்டணி 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன்.
இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் கலக்கிய முதல் பாகம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததுடன், வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கி பல சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து தற்போது கிட்டத்தட்ட நிறைவடையும் தறுவாயில் உள்ளது.
காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கிஷோர் , ஜி.மாரிமுத்து எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்
தற்போது, இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக இப்படம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாள்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.