Gautham Karthik Manjima : கணவரை க்யூட்டாக வாழ்த்திய மஞ்சிமா மோகன்!
மஞ்சிமா மோகன் - கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவிவந்தது. பின், சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் காதலிப்பதாக கடந்தாண்டின் அக்டோபர் 31 ஆம் தேதியன்று அறிவித்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதைதொடர்ந்து இருவரின் திருமண விழா, உற்றார் உறவினர் சூழ நவம்பர் 28 ஆம் தேதியன்று சிம்பிளாக நடந்து முடிந்தது.
அதைதொடர்ந்து கிறிஸ்துமஸ், பொங்கல் என வரிசையாக பண்டிகைகளை கொண்டாடினர்.
பின் பத்து தல, 1947 படங்களில் நடித்த கெளதமிற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் போஸ்ட் பதிவிட்டு வந்தார்.
இன்று கெளதம் கார்த்திக்கின் பிறந்தநாளையொட்டி, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர். நீ என் வலிமையின் தூண், என் நம்பிக்கைக்குரியவன், என் ஆத்ம தோழன், என் இரட்டைச் சுடர், மற்றும் பல!! இந்த வாழ்க்கை பயணத்தில் நான் உன் அருகிலேயே இருப்பேன், உன் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உன்னை ஒருபோதும் விழ விடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்!” என அன்பு பொங்க பதிவிட்டுள்ளார் மஞ்சிமா மோகன்.
மஞ்சிமாவின் க்யூட் வாழ்த்து பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -