HBD Mammootty : இன்றுடன் மம்மூட்டிக்கு 73 வயசாகுதா? பார்த்தா தெரியல..
மலையாள சினிமாவில் 80களில் தொடங்கிய பயணம் இப்போது வரை தொடர்ந்து வருகிறது என்றால் சும்மாவா? வயதானாலும் இப்போதும் இளைஞன் போல் நடித்துக்கொண்டிருக்கிறார் முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் எனும் மம்மூட்டி.
சமீபத்தில் நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட், பிரம்மயுகம் உள்ளிட்ட ஹிட்களை கொடுத்தார்.
மலையாள சினிமா ரசிகர்களை தாண்டி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர் பரிட்சயமானவர்தான். மணிரத்னத்தின் தளபதி படத்தில் சூர்யாவின் தோழன் தேவாவாக (தேவராஜ்) நடித்தார்.
நட்புக்கு இலக்கணமான இவரது கதாபாத்திரமும், காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடலும் இன்றும் பலரது ரிங்டோனாக இருக்கிறது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
ஆங்கிலத்தில் உருவான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், படத்தில் அம்பேத்கராகவே நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.