Kattu Malli : ‘வழி நெடுக காட்டுமல்லி...’ இளையராஜாவின் இசை ஜாலத்தை பாடி அசத்திய லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான விடுதலை நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினி அப்படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இப்படத்தின் ‘உன்னோடு நடந்த’மற்றும் ‘காட்டு மல்லி’ ஆகிய பாடல்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது.
வழி நெடுக என தொடங்கும் இப்பாடலை இளையாராஜவே இசையமைத்து பாடியுள்ளார்.
சுகா மற்றும் யுக பாரதியின் அழகிய வரிகளுக்கு அனன்யா பாண்டே, பெண்மை நிறைந்த அவரின் குரலால் உயிர் கொடுத்துள்ளார்.
இந்த பாடலுக்கு “இதுதான் விண்டேஜ் இளையராஜா”, “இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!!”, “பாடல் திரும்ப திரும்ப கேட்டாலும் முதல் தடவை கேக்குற மாதிரியான உணர்வை தருகிறது” என பல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்ட லிடியன் நாதஸ்வரம், வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து பரிசுத்தொகையை பெற்று பிரபலமானார். தற்போது, இவர் வாசிக்க இவரின் தந்தை காட்டு மல்லி பாடலின் சில வரிகளை பாடியுள்ளார்.