Today release movies : ஆரம்பமே அள்ளுதே... ஏப்ரல் முதல் வாரத்தில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?
ஃபேமிலி ஸ்டார் : விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஒயிட் ரோஸ் : அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இரவின் கண்கள் : பாப் சுரேஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் டோலி ஐஸ்வர்யா, கிரி துவாரேஷ், அழகு ராஜா குமரன், செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை சார்லஸ் தனா, ஒளிப்பதிவு கீதா கிரண்.
வல்லவன் வகுத்ததடா : தேஜ் சரண்ராஜ், பாலச்சந்திரன், ராஜேஷ், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை விநாயக் துரை இயக்கியுள்ளார்.
ஒரு தவறு செய்தால் : மணி தாமோதரன் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், உபசனா, நமோ நாராயணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு கே.எம். ராயன் இசையமைத்துள்ளார்.
டபுள் டக்கர் : மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், கோவை சரளா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு வித்யாசகர் இசையமைத்துள்ளார்.
ஆலகாலம் : அறிமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் சாந்தினி, பாபா பாஸ்கர், தீபா, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்