Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mayilsamy Comedy: 'நினைத்தாலே சிரிப்பு வரும்..' மறக்க முடியாத மயில்சாமியின் கவனம் பெற்ற காமெடிகள்..!
எல்.கே.ஜி திரைப்படத்தில் வில்லனுக்கான பில்டப் சீனை பேசும்போது, ”எதிர்த்து நிக்குறது தோனிமா” என மயில்சாமி ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த காட்சியில் அது மாஸ் ஆகவே இருந்தாலும், நாளடைவில் அது பெரும் மீம் கண்டண்டாகவே மாறி வைரலானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதவசி திரைப்படத்தில் ஒரே காட்சியில் மட்டும் நடித்திருந்தார். வடிவேலுவிற்கு விபூதி அடித்து பணத்தை சுருட்டும் காட்சிகள் மயில்சாமிக்கே உண்டான நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி இருக்கும்.
பாஸ் திருப்பதியில இப்ப லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்குறாங்கணு” சொல்லும் தூள் பட காமெடி அனைவரைக்கும் இன்றளவில் கூட சிரிப்பை ஏற்படுத்தும்.
சாணக்யா திரைப்படத்தில், பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரு ஆட்டோவை பிளான் போட்டு மீட்டெடுக்கும் காட்சி வயிறு வலிக்க சிரிக்கை வைத்தது.
தலைநகரம் படத்தில் ”நீ நடிகன்டா” வசனம் பல இளைஞர்களின் முக்கிய கவுண்டராகவும் மாறியுள்ளது.
உன்னை நினைத்து படத்தில், தான் அழகாக வேண்டும் என்பதற்காக தங்க பஸ்பம் லேகியத்தை வாங்கி உண்பதால், அவர் எதிர்கொள்ளும் விளைவுகள் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைத்தது.
என் புருஷன் குழந்தை மாதிரி திரைப்படத்தில் டாக்டர் குயில்சாமியாக தோன்றிய அவர், நோயாளிகளிடம் மாட்டி கொண்டு படாத பாடு பட்டிருப்பார். அந்த காட்சிகள் அனைத்தும் இன்றளவும் நகைச்சுவையாக இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -