Yatra 2 : ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா...வெளியானது யாத்ரா 2 படம்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிமிஸின் நிறுவனர் ஆர்.பி. செளத்ரி இளைய மகனான ஜீவா, பெரும் புள்ளி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்
ஆசையாய் ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, தித்திக்குதே, ராம், திஷ்யூம், ஈ, கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிங்கம் புலி, கோ, ரௌத்திரம், நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார்.
சமீப காலங்களில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் சரியாக ஓடவில்லை. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜீவாவை மிஸ் செய்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜீவாவின் நடிப்பில் யாத்ரா 2 படம் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஜீவா ஒய்.எஸ்.ஜெகனாக நடித்துள்ளார்.
இப்படம் பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கு முன்பாக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து யாத்ரா படத்தின் முதல் பாகம் வெளியானது. இதில் மம்மூட்டி, எனும் தெலுங்கு படம் வெளியானது. இதில், ஒய்.எஸ்.ராஜசேகராக மம்மூட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.