Iraivan Update : ஜெயம் ரவி - நயன் காம்போவில் உருவாகும் இறைவன் படத்தின் ரிலீஸ் எப்போது?
image 5பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஹமத் இயக்கத்தில் உருவாகி வரும் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது ‘இறைவன்’. ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதற்கு முன்பாகவே அஹம்த்- ஜெயம் ரவி - யுவன் கூட்டணியில், ‘ஜன கண மன’படம் எடுக்கப்பட்டது. கொரோனாவால் படப்பிடிப்பு நின்றது.
தனி ஒருவனுக்கு பின் நயனும் ஜெயம் ரவியும் இப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
இறைவன் குறித்த அப்டேட் நேற்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.
தற்போது, இறைவன் படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படம் வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது. இப்போது செப்டம்பர் 28 ஆம் தேதி படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உடன் சைரன் படத்திலும் நயன்தாரா, ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.