Irfan khan : வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இர்ஃபான் கானின் படங்கள்!
அஷோக் (இர்ஃபான்) மற்றும் அவரது மகன் நிகில் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு சிக்கல்களைப் பற்றிய படம் தி நேம்சேக்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு விளையாட்டு வீரன் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக மாறும் கதை பான் சிங் தோமர். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் இர்ஃபான் கான்.
பை படேல் என்பவர் தனது இளமைக் கால அனுபவங்களை நினைவுகூறுவதன் வழியாக சொல்லப்படும் கதை லைஃப் ஆஃப் பை. இந்த படம் நான்கு ஆஸ்கர்களை வென்றது.
மனைவியை இழந்த ஒருவருக்கும் கணவரிடம் போதுமான கவனம் கிடைக்காத பெண்ணுக்கும் இடையில் எதேச்சையாக ஏற்படும் உறவை கதைக்களமாக கொண்டது தி லஞ்ச் பாக்ஸ். தனது நடிப்பால் மிக மெல்லிய உணர்வுகளுக்கு உயிர்கொடுத்தவர் இர்ஃபான்.
தீபிகா படுகோன் அமிதாப் பச்சன் மற்றூம் இர்ஃபான் கான் ஆகிய மூவரும் இணைந்து திரையில் நடித்தப் படம் பிகு. இவர்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான கதைதான் இந்தப் படம்.
இர்ஃபானின் கடைசிப் படம் இது. வெளிநாட்டிற்கு படிக்கச் செல்ல வேண்டும் என்கிற தன் மகளின் கணவை நிறைவேற்றும் தந்தையின் கதை. இந்த படத்திற்காக இர்ஃபானுக்கு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -