KK day of commemoration : மண்ணை விட்டு மறைந்தாலும் - மனதை விட்டு நீங்காத கிருஷ்ணகுமார் குன்னத் படல்கள் ! முதலாம் நினைவு தினம்
1968 ஆம் ஆண்டு டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத் திரையுலகில் அனைவராலும் கே.கே. என அன்போடு அழைக்கப்பட்டார்
1996 ஆம் ஆண்டு முதலே திரையில் பல பாடல்களை அவர் பாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக பாடல் ஒன்றை பாடியிருந்தார்
மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் சுமார் 3500க்கும் மேற்பட்ட பாடல்களை கே.கே. பாடியுள்ளார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது
இதனிடையே கடந்தாண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் பங்கேற்ற கே.கே.வுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இவர் முதலாம் நினைவு ஆண்டான இன்று அவரது நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.