Indian 2 : கூடிய விரைவில் நிறைவாகவிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு!
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படத்தின் ஷூட் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூரியா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த பிரமாண்டமான படத்தை லைகா, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.
இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இதன் முக்கிய காட்சிகள் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மாபெரும் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் வாரத்துடன் முடிவடைவதாக தகவல் வந்துள்ளது.
மீதமுள்ள சில முக்கியமான காட்சிகளை படம்பிடிக்க ஜூலை 2ஆம் வாரத்தில் கமல், ஷங்கர் உள்ளிட்ட படக்குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்வுள்ளதாக கூறப்படுகிறது.