IND vs WI : நான்காவது டி20 போட்டியை விளையாட அமெரிக்கா சென்றுள்ள இரு அணிகள்.. வெல்ல போவது யார்?
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் வென்றது இந்தியா.
முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 ஒன்று கணக்கில் வென்றது
இதனை தொடர்ந்து நடந்த டி20 தொடரில் இந்திய அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறினர்.
அடுத்து நடந்த மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் திலக் வர்மா, மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடினர்
இன்று நான்காவது டி20 போட்டி விளையாடிய இரு அணிகளும் அமெரிக்கா சென்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்குவதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.