HBD Vignesh Shivan: விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஸ்பெஷல் க்ளிக்ஸ்
கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிதான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், அடிக்கடி வினா , விடை செஷன் நடத்துவது வழக்கம். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இல்லாத நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்.
ஹாலிடே பயணங்களிலும், ஆன்மீக பயணங்களிலும் நயன்தாராவுடன் அவர் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதுமே சோஷியல் மீடியா ஹிட்ஸ்தான்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பேபி நிறுவனம், 7 Screen Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்தான் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம். இந்த படத்திற்கும் அனிருத்தான் இசை. வின்னேஷ் சிவன், அனிருத், நயன்தாரா சினிமாவையும் தாண்டிய நல்ல நண்பர்கள்.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளையொட்டி, காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் two two two என தொடங்கும் பாடலுக்கு இசையமைத்திருக்கும் அனிருத், அந்த பாடலில் நடிக்கவும் உள்ளார். இந்த பாடல் இன்று வெளியானது.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா சர்ப்ரைஸ் செய்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் பயங்கர அவருக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -