HBD Pa.Vijay: பூமிப்பந்தை கூடைப்பந்தாக்கியவர் - கவிஞர் பா.விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் பலர் வந்து சென்றாலும் சிலர் மட்டுமே காலத்தில் நிலைத்து நிற்பர். கண்ணதாசன் தொடங்கி நா. முத்துக்குமார்வரை அந்த பட்டியல் நீளும். அவர்களில் மிக முக்கியமான பாடலாசிரியர் பா. விஜய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1990கள் காலக்கட்டம் என்பது தமிழ் சினிமாவுக்கு முக்கியமான காலக்கட்டம். அந்த படையில் முக்கிய தளபதி பா. விஜய். வாலிப கவிஞர் வாலியிடம் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினாலும் தனியாக பாடல்கள் எழுத ஆரம்பித்ததும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
முக்கியமாக கருமையை கண்டு அனைவரும் ஒருவித ஒவ்வாமை கொண்டிருந்த சமயத்தில் பா. விஜய்யின் மை “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்று பேசியது. அதன் பிறகு விஜய்யின் பாடல்களையும், கவிதைகளையும் ஒட்டுமொத்த தமிழ்நாடும், கவிஞர்களின் மேடைகளும் பேசின.
யுவன் ஷங்கர் ராஜா - நா. முத்துக்குமார் கூட்டணி எவ்வளவு ரம்யங்களை ரசிகர்களுக்கு அளித்திருக்கிறதோ அதே அளவு ரம்யங்களை யுவன் - பா. விஜய் கூட்டணியும் கொடுத்திருக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடல் சீரியஸ் மோடில் இருந்து வாழ்க்கைக்கு ஊக்கம் அளிக்கும். ஜூன் போனால் ஜூலை காற்றே பாடல் போகிறபோக்கில் இலகுவாக ஊக்கம் அளிக்கும். பா. விஜய்யால் மேடை போட்டும் ஊக்கமளிக்க முடியும், நதி மேல் இலையாய் மிதந்துகொண்டும் ஊக்கமளிக்க முடியும்.
தமிழ் மொழியில் அர்ச்சனை வேண்டும் என்ற விஷயம் தலையெடுக்க ஆரம்பிக்கும்போதே, “தமிழில் பேசும் தமிழ் குலம் இருக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு” என்று சினிமாவில் பேனா சுழற்றியவர் பா. விஜய்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -