Aishwarya Krishnan pics: வீராங்கனை, ஃபிட்னஸ் பயிற்சியாளர், மாடல்! சர்வைவர் ஐஸ்வர்யா ஸ்பெஷல் க்ளிக்ஸ்
பிரபல நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனையாக இருந்து பயிற்சியாளராக மாறிய ஐஸ்வர்யா பற்றிய குறிப்புதான் இது!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஐஸ்வர்யா ஒரு விளையாட்டு வீராங்கனை. படகு ஓட்டும் விளையாட்டில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வெறுள்ள அவர், அடுத்து ஃபிட்னஸ் பயிற்சியாளராகவும் வேலை செய்து வருகிறார்
சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரான இவர், முன்னணி பிரபலங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். பார்ட்- டைம் மாடலான இவர் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டீவ். அதே இன்ஸ்டாகிராமால்தான் ஐஸ்வர்யாவுக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
பல சாகசங்களை அசால்ட்டாக செய்து ரீல்ஸ் பதிவேற்றி இருக்கும் அவர், ஃபிட்னஸ் ஃபிட்னஸ் ஃபிட்னஸ் என எந்நேரமும் ஃபிட்னஸைப் பற்றி யோசிப்பவராம்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தபோதும், தனது ஃபிட்னஸ் வொர்க்-அவுட்டுக்கு இடைவெளிவிடாத ஐஸ்வர்யா, வீட்டிலேயே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டாராம்.
அதுமட்டுமின்றி, இயல்பாகவே விளையாட்டு, சாகசம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா சர்வைவர் நிகழ்ச்சியிலும் செம ஆக்டீவாகவே இருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -