Pathu Thala vs Viduthalai: பதற வைக்கும் ’பத்து தல’க்கு வேட்டு வைக்குமா ’விடுதலை’? இருவரில் வெல்லப்போவது யார்?
சிம்பு மாஸாக கம்-பேக் கொடுத்துள்ள படம், பத்து தல. சிம்பு ரசிகர்கள் மட்டுமன்றி சினிமா ரசிகர்கள் பலரும் இப்படத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்
இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இதனை டைரக்டு செய்துள்ளார்
நடிகர் சூரி, முதல் முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் விடுதலை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்
பத்து தல படம், இம்மாதம் 30ஆம் தேதியும் விடுதலை படம் 31ஆம் தேதியும் வெளியாகிறது
வழக்கமான காதல், காமெடி என்றில்லாமல் வித்தியாசமான கதைக்களத்தைத்தான் இரண்டு படங்களும் கொண்டுள்ளது
விடுதலை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
’மக்கள் செல்வன்’ என்றழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதனால், வெற்றிமாறனின் விடுதலை படம் கண்டிப்பாக வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது
பத்து தல vs விடுதலை போடியில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது
நடிகர் சூரி இப்படத்திற்கென ஸ்பெஷலாக பல ட்ரெய்னிங் எடுத்துக்கொண்டார். நடிகர் சிம்புவும் பத்து தல படத்திற்காக தனது லுக்-ஐ மாற்றினார்
பத்து தல-விடுதலை ஆகிய இரண்டு படங்களில் எது வெற்றி பெற போகிறது என்பது பட ரிலீஸிற்கு பிறகுதான் தெரியும்